தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: உறவினர்கள் போராட்டம்

By

Published : Dec 18, 2021, 12:20 PM IST

Updated : Dec 31, 2021, 12:02 PM IST

திருப்பூரில் நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

school child abuse  parents protest against school  4 year old girl child private school in tamilnadu  திருப்பூர் மாவட்டம்  நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு  உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி சாலை கே.ஜி. புதூரில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் பயிலும் நான்கு வயது பெண் குழந்தைக்கு கடந்த 14ஆம் தேதி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக நேற்றுமுன் தினம் காவல் துறையிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இப்புகாரினைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வடக்கு மகளிர் காவல் துறையினர் பள்ளியில் வந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், நேற்று மாலை வரை என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது எனக் காவல் துறை தரப்பில் குழந்தையின் பெற்றோருக்குத் தெரிவிக்கவில்லை.

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி குழந்தையின் உறவினர்கள் பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றவாளியைக் கைதுசெய்ய தாமதப்படுத்துவதாகவும் கூறி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டபோது, குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக கூறியதும் பள்ளியின் அனைத்து சிசிடிவிகளையும் ஆய்வு செய்துவிட்டதாகவும், அப்படி ஒரு சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும் கூறுகின்றனர்.

சிசிடிவி காட்சிப் பதிவுகளை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறினர். இந்தப் புகார் தொடர்பாக தற்போதுவரை காவல் துறை சார்பில் வழக்குப் பதிவுசெய்யப்படாத நிலையில், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து

Last Updated : Dec 31, 2021, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details