தமிழ்நாடு

tamil nadu

கோவை அவினாசி சாலையில் 9 கி.மீ. துாரத்திற்கு புதிய மேம்பாலம்!

By

Published : Nov 21, 2020, 1:43 PM IST

கோவை: அவினாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்ட்விங்ஸ் வரை 9 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் வரவுள்ளது.

கோவை
கோவை

இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் தலைமையில் சில தினங்களில் கோவையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு வருகை தர இருக்கின்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு மேம்பால திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதாகவும் கோவையில் வரவுள்ள இந்த மேம்பால பணிக்கும் அடிக்கல் நாட்ட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இன்று கோவை அவினாசி சாலையில் வரவுள்ள மேம்பாலத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. மேம்பாலம் அமைக்கப்பட உள்ள சாலையில் மார்க் செய்யும் பணிகள் தொடங்கப்படுள்ளன.

இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் கோவையில் மிக நீண்ட பாலமாக இது அமையும். அதுமட்டுமின்றி உப்பிலிப்பாளையம் முதல் கோல்ட் விங்க் பகுதிவரை உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட சிக்னலில் பொதுமக்கள் நிற்காமல் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நேரமும் குறையும்.

ABOUT THE AUTHOR

...view details