தமிழ்நாடு

tamil nadu

சிறு,நடுத்தர தொழில் முனைவோருக்கு மின்கட்டணம் குறைய வாய்ப்பு... அமைச்சர் செந்தில் பாலாஜி

By

Published : Aug 23, 2022, 8:37 PM IST

தமிழ்நாட்டில் சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு மின் கட்டண குறைப்பு பரிசீலனை செய்யப்பட்டு குறைக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோவை: பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஈச்சனாரி பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளநிலையில், அதற்கான பணிகளை இன்று (ஆக.23) மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு குறித்து சிறு, குறு நடுத்தரத் தொழில் முனைவோர்கள், மின் கட்டண விலையை குறைப்பதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க மின்சாரத்துறை அதற்கான பரிசீலனை மேற்கொண்டு, பிக்சிடு சார்ஜ் மற்றும் டிமாண்ட் சார்ஜ்களில் விலை மாற்றம் செய்து ஒழுங்குமுறை ஆணையம் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்யும். மின் கட்டணங்களில் ஏதேனும் சலுகைகள் தரப்படுமா? என்று கேள்விக்குப் பதில் அளித்த அவர் இழப்புகளை சரி செய்யக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சலுகைகள் தரக்கூடிய அளவிற்கு மின்சார வாரியம் தற்பொழுது உள்ளதா? என யோசிக்க வேண்டும்’ என்றார்.

’மேலும் வீடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை; சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு மட்டும் விலை குறைப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளப்படும். நோட்டாவுடன் போட்டியிடுபவர்களை தங்களுடன் ஒப்பிட வேண்டாம்’ என பாஜக பற்றி விமர்சித்தார்.

மேலும் அவர்கள் கோவையில் எந்த ஒரு வார்டிலும் ஜெயிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் பாஜகவினரை திமுகவினரோடு ஒப்பிடுவதா? எனவும்; இல்லாதவர்களை (பாஜக) இருப்பதுபோல் செய்திகளும் ஊடகங்களும் சமூக வலைதளங்களும் தான் காட்டுகின்றன எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சிறு,நடுத்தர தொழில் முனைவோருக்கு மின்கட்டணம் குறைய வாய்ப்பு... அமைச்சர் செந்தில் பாலாஜி

இதையும் படிங்க: பொறியியல் பாடத்திட்டத்தில் முதல்முறையாக தமிழர் மரபு, தமிழரின் தொழில்நுட்பம்

ABOUT THE AUTHOR

...view details