தமிழ்நாடு

tamil nadu

விநாயகருக்கு சலாம் போட்ட யானைகள் - ஆனைமலை யானைகள் காப்பகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

By

Published : Aug 31, 2022, 8:16 PM IST

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இன்று (ஆகஸ்ட் 31) விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆனைமலை யானைகள் காப்பகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
ஆனைமலை யானைகள் காப்பகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

கோயம்புத்தூர்: உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா(எ)முத்து என கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் உலக யானைகள் தினம், பொங்கல் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி தினங்களில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்புப்பூஜை செய்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் டாப்சிலிப் புல் மேட்டில் வளர்ப்பு யானைகளைக்கொண்டு வந்து சுற்றுலாப் பயணிகள் பலரும் கவரும் விதமாக நிகழ்ச்சிகளை வனத்துறையினர் நடத்தினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் ஆண்டுதோறும் அப்பகுதியில் உள்ள விநாயகர் சிலைக்கு, யானைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொங்கல், கரும்பு, தேங்காய் படையல் வைத்து விநாயகர் சதுர்த்தியினைக் கொண்டாடுவர்.

ஆனைமலை யானைகள் காப்பகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சியில் இருந்து வந்த வனத்துறையினர் வாகனம் மூலம் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று, வனத்துறை உயர் அலுவலர்கள் மற்றும வேட்டைத் தடுப்பு காவலர்கள் பங்குபெறும் வகையில் செய்தி செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வனத்துறையினர் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனைமலை யானைகள் காப்பகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

இதையும் படிங்க:முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை படையல்... அசரவைக்கும் காரணம்?!

ABOUT THE AUTHOR

...view details