தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளுக்கிடையே தகராறு - துப்பாக்கியால் மிரட்டியவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

By

Published : Dec 7, 2019, 12:02 AM IST

கோவை: விவசாயிகள் இருவருக்கு இடையே நடைபெற்ற தகராறில் துப்பாக்கியை பயன்படுத்தி மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி பயண்படுத்திய துப்பாக்கி
விவசாயி பயண்படுத்திய துப்பாக்கி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பொன்னயூர்பிரிவு போடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சூரிய தர்ஷன் என்பவருக்கும் அவர்களின் தோட்டத்திற்குச் செல்லும் பொது வழித்தடம் குறித்து பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி சென்ற சக்திவேல் இருசக்கர வாகனத்தில், தனது தோட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும் போது சூரிய தர்ஷன் அவரை அவமதித்து, வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். வாகனத்தின் சாவியைக் கேட்ட சக்திவேலிடம் வழித்தடத்தில் வரக்கூடாது என்று எச்சரித்த, சூரிய தர்ஷன் வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து சக்திவேலை மிரட்டினார்.

பொள்ளாச்சி காவல் நிலையம்

அப்போது துப்பாக்கியை மேல்நோக்கி இரண்டு முறை சுட்டும் உள்ளார். இதில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சக்திவேல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சூரிய தர்ஷனை காவல் துறையினர் கைது செய்தனர். பின் அவரிடம் இருந்த ஒற்றை குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர், சூர்ய தர்ஷன் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

பழச் சிற்பங்களில் தலைவர்களின் உருவங்கள் - அசத்தும் மதுரை கலைஞர்

ABOUT THE AUTHOR

...view details