தமிழ்நாடு

tamil nadu

அமித் ஷாவை வரவேற்றது அதிமுகதான், பாஜக இல்லை - சஞ்சய் தத்

By

Published : Nov 21, 2020, 7:02 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு வந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக தொண்டர்கள்தான் வரவேற்றனர், பாஜகவினர் வரவேற்கவில்லை என அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.

congress-general-secretary-sanjay-dutt
congress-general-secretary-sanjay-dutt

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் எழுச்சி மாநாடு மற்றும் ஏர்கலப்பைான பேரணி நாளை (நவ.22) நடைபெற உள்ளது. அதன்காரணமாக மாநாடு நடைபெறும் இடத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சஞ்சய் தத் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாளை நடைபெற உள்ள மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொள்கின்றனர். இது விவசாயிகளுக்கு ஊக்கத்தை தரும் மாநாடாக அமையும்" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், அமித் ஷா வருகையால் தமிழ்நாட்டில் எந்தவித மாறுதலும் ஏற்படப்போவதில்லை. விமான நிலையத்தில் பாஜகவினருக்குப் பதிலாக அதிமுகவினர்தான் அமித் ஷாவுக்கு வரவேற்பளித்தனர்.

மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மக்களால் ஓரம் கட்டும் காலம் விரைவில் வரும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பாஜக அரசு ஊழல் மிகுந்த விற்பனை அரசு - சஞ்சய் தத்

ABOUT THE AUTHOR

...view details