தமிழ்நாடு

tamil nadu

நாய் மீதான பேரன்பின் வெளிப்பாடு: பிஸ்னஸ் கிளாஸ் முழுவதையும் புக் செய்த பெண்!

By

Published : Sep 21, 2021, 2:23 PM IST

மும்பையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது நாய்க்கு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விமானத்தில் அழைத்துவந்த சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமானத்தில் நாயுடன் வந்த பெண்
விமானத்தில் நாயுடன் வந்த பெண்

சென்னை:ஏர்-இந்தியா விமானத்தில் வளர்ப்புப் பிராணிகளை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 5 கிலோ எடைக்கு கீழ் இருந்தால் அவற்றை பையில் அடைத்துக் கொண்டுவர வேண்டும் எனவும் இல்லையெனில் சரக்கு கேபின் மூலமாக கொண்டுசெல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்காகத் தனி கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்தத் திட்டத்தை அறிந்த மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், சென்னைக்கு தனது செல்லப் பிராணியான ‘மால்டீஸ்’ வகை நாயை கொண்டுவர முடிவுசெய்தார். மேலும், அந்த நாயை தன்னுடன் இறுக்கையில் அமரவைத்து கொண்டுவரவும் ஆசைப்பட்டார்.

நாய்க்கு ரூ.2.40 லட்சம் செலவு

தனது செல்ல பிராணியை விமானத்தில் அழைத்துவந்தால் பிற பயணிகள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். அருகில் அமரும் பயணிகள் முகம் சுழிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் மும்பையிலிருந்து சென்னை வரக்கூடிய விமானத்தின் பிசினஸ் வகுப்பில் இருந்த 12 இருக்கைகளையும் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து பதிவுசெய்தார்.

பின்னர் தனது செல்ல நாயுடன் மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். காலை 9 மணிக்குப் புறப்பட்ட விமானம் சரியாக 11.55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தனது நாய்க்காக இவ்வளவு செலவு செய்து விமானத்தில் கொண்டுவந்த பெண்ணை, விமான ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கண்டனர். அதிக செலவு செய்து நாயை அழைத்துவந்த அந்தப் பெண் குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க:விமானம் மூலம் வெளிநாட்டு பணங்களை கடத்த முயன்றவர் கைது

ABOUT THE AUTHOR

...view details