தமிழ்நாடு

tamil nadu

சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன்?

By

Published : Feb 17, 2022, 4:41 PM IST

தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
mhc

சென்னை: நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்துக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தரப்பிலிருந்து, தமிழ்நாட்டில் மொத்த நிலப்பரப்பில் 6.92 விழுக்காடு சதுப்பு நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் சதுப்பு நிலங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே, அதனை பாதுகாக்க முடியும். இன்றைய தேதிக்கு பள்ளிக்கரணை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கழுவேலி பகுதிகள் மட்டுமே சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 12 பகுதிகள் சதுப்பு நிலங்களாக அறிவிக்க பரிசீலனை உள்ளது என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டவிதிகளின் கீழ் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்களை விரைவில் அறிக்கையாக தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடுவதற்கான தாமதம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடுக்கு தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதலமைச்சர் ஒப்புதல்; தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details