தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சரிடம் நேரடியாகப் புகார் அளிக்க இணையதளம்: தமிழ்நாடு அரசு

By

Published : Jun 9, 2021, 11:20 PM IST

தமிழ்நாடு முதலமைச்சரிடம் பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அனுப்பும்விதமாக தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரிடம் பொதுமக்கள் நேரடியாக www.cmcell.tn.gov.in/register.php என்ற இந்த இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு மாத காலம் முடிந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அரசு நடவடிக்கை எடுத்துவந்தாலும், தற்போது கரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள நிலையில் அதன் தடுப்புப் பணிகளில் அரசு முழுமையாக ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு வாயிலாக பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக முதலமைச்சரிடம் சொல்லும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. www.cmcell.tn.gov.in/register.php என்ற இந்த இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம் என்பதுடன், புகார் மீதான நடவடிக்கை நிலவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நேரடியாகப் பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அதற்காக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான அம்பாசமுத்திரம் அம்பானி!

ABOUT THE AUTHOR

...view details