தமிழ்நாடு

tamil nadu

முல்லை பெரியாறு அணையில் நேரில் ஆய்வு - துரைமுருகன்

By

Published : Nov 5, 2021, 10:50 AM IST

Updated : Nov 5, 2021, 10:56 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகளில் நிலை குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன், முல்லை பெரியாறு அணை
துரைமுருகன்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மதுரை செல்கிறார். இதற்காகச் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமைச்சர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிலவிவரும் சூழ்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் அணைக்கட்டுகள் நிலை குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், இன்று முல்லைப் பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறினார்.

வேடிக்கையாக உள்ளது

மேலும், முல்லைப் பெரியாறு அணை பற்றி பலவிதமான செய்திகள் தமிழ்நாட்டில் உலாவிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். கேரள அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை நேரில் சென்று ஆய்வு செய்து அவர்கள் தரப்பு அறிக்கைகளைத் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணைக்கு நேரில் சென்று எந்தவித ஆய்வும் மேற்கொள்ளாமல் அணையின் நிலவரம் குறித்து தெரியாமல் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தைரியம் இல்லாத அதிமுக

துரைமுருகன்
மேலும், நீட் தேர்க்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பதா?" எனவும் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினர்.

“முதலமைச்சர் வழங்கியிருப்பது பட்டா அல்ல, நம்பிக்கை” - நடிகர் சூர்யா

Last Updated : Nov 5, 2021, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details