தமிழ்நாடு

tamil nadu

நீர்நிலைகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

By

Published : Feb 10, 2022, 10:13 PM IST

நீர்நிலைகளைக் கண்காணிக்க மூன்று வகையான குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகளை கண்காணிக்க குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு
நீர்நிலைகளை கண்காணிக்க குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இவற்றைக் கண்காணிக்க மூன்று வகையான கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி தலைமைச் செயலாளர் வி.இறையன்பு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைச் செயலாளர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை தலைவர், நில அளவு இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்டல அளவிலான கண்காணிப்புக் குழு அமைத்து, தாசில்தார்கள் நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்ட குழுவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரப் பகுதிகளில் மாநகர காவல் ஆணையர்கள்,மாநகராட்சி ஆணையர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு நீர்நிலைகளைக் கண்காணிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீதிமன்ற உத்தரவுகளை கண்காணித்து மதிப்பாய்வு செய்வதோடு, மாதம் ஒரு முறை இக்குழு கூடி ஆலோசனை மேற்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வாக்கு சேகரிக்க கூட்டமாக செல்லக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details