தமிழ்நாடு

tamil nadu

11 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன - அமைச்சர் சக்கரபாணி

By

Published : Oct 12, 2022, 5:12 PM IST

தமிழ்நாட்டில் 11 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

11 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் சக்கரபாணி
11 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல்லை சேமிக்க கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் சக்கரபாணி

சென்னை:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பருவகால பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பணிநிமன ஆணைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், “ஆண்டுதோறும் ஜூன் மாதம் தான் மேட்டூர் அணை திறக்கப்படும், ஆனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மே மாதமே திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குறுவை பருவ நெல் சாகுபடி அக்டோபர் 1ஆம் தேதி தான் கொள்முதல் செய்யப்படும், ஆனால் இந்த ஆண்டு அரசின் நடவடிக்கைகளால் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் 1,336 நேரடி கொள்முதல் நிலையங்களில் 4.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 3.86 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்கள் நிறைய இடங்களில் திறக்கப்படவில்லை என பொய் புகார் கூறுகிறார்கள். கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேரடி கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் புகார் தெரிவிக்க இலவச அலைபேசி எண் 1800 5993540 கொடுக்கப்பட்டுள்ளது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

22 சதவீத ஈரப்பதம் கொண்ட நெல்லை வாங்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதி விஜயன் மத்திய உணவு பாதுகாப்பு துறை செயலாளரை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருக்கிறார். வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவு துறை செயலர், டெல்லி சென்று மத்திய துறை அலுவலர்களிடம் வலியுறுத்த இருக்கிறார்.

25 சதவீதம் ஈரப்பதம் மிக்க நெல் 3.50 லட்சம் மெட்ரிக் டன் நெல் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. அரிசியில் கரும்பலுப்பு நெல்லை கண்டறிய அனைத்து தனியார் அரிசி அரவை ஆலைகளில் கலர் சாட்டார் என்று சொல்ல கூறிய நிரபிரிப்பு மானி பொருத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பங்களிப்புடன் 13 புதிய நெல் அரவை ஆலைகள் அமைக்க நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறபட்டுள்ளது.

பொது மக்கள் ஒரு பக்கம் தரமான அரசி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். விவசாயிகள் ஒரு பக்கம் ஈரப்பதம் மிக்க நெல்லை வாங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால், முதலமைச்சர் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.

விவசாயிகள் நெல்லை எவ்வளவு உற்பத்தி செய்தாலும் அரசு வாங்க தயாராக உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளியில் நெல் இருப்பதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 11 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் சேமிக்க சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது.

செமி குடோன் மற்றும் முழுவதுமாக கவர் செய்யப்பட்ட சேமிப்பு குடோன்களில் நெல்லை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 238 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதத்தில் பணிகள் முடியும் என எதிர்பார்க்க படுகிறது .

ஒரு மாதத்திற்கு 10 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு நெல் அறைக்க அரவை ஆலைகள் உள்ளது. எனவே நெல் சேமித்து வைத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படாது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மடிக்கணினி - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details