தமிழ்நாடு

tamil nadu

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியிடங்கள்

By

Published : Dec 2, 2021, 1:32 PM IST

கரோனா காலத்தில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்கள் தேசிய சுகாதாரத் திட்டத்தில் நியமிக்கப்படவுள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vacancies in medicine and public welfare department
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியிடங்கள்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 2,448 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளர்கள் (Gr-II) துணை சுகாதார நல்வாழ்வு மையங்களிலும், 4848 இடைநிலை சுகாதார பணியாளர்கள் துணை சுகாதார நல்வாழ்வு மையத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மேலும் தகுதிகளின் அடிப்படையில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (ஆண்) / சுகாதார ஆய்வாளர்கள் (Gr-II), இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலமாகத் தேர்வுசெய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

இதற்கான தேசிய நல்வாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நல்வாழ்வு குழுமம் வலைதளங்களில், வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை, முற்றிலும் வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்படத் தேவையான வழிகாட்டு நெறிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள், செவிலியரின் அரிய பணியினைக் கருத்தில்கொண்டு மாவட்ட சங்கங்களின் மூலம் தேர்வு நடைபெறும்போது, கரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details