தமிழ்நாடு

tamil nadu

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஸ்டுடியோ சீலை அகற்ற உயர் நீதிமன்றம் அனுமதி

By

Published : Jul 21, 2022, 9:32 AM IST

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஸ்டுடியோவின் சீலை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கறுப்பர் கூட்டம் யூட்யுப் சேனல் ஸ்டுடியோ  சீலை அகற்றி திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி
கறுப்பர் கூட்டம் யூட்யுப் சேனல் ஸ்டுடியோ சீலை அகற்றி திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வீடியோ தயார் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட ஸ்டுடியோவை கடந்த 2020 அன்று பூட்டி சீல் வைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டி கிடப்பதாலும் , அங்கே இருக்கும் பொருட்களை பாதுக்காக்க வேண்டியும் மனுதாரர் கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து மனுதார் சார்பில் தனது ஸ்டுடியோவில் சர்ச்சைக்குரிய எந்த வீடியோவும் தயாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று பிரமான பத்திரததை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மனுதாரரின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி , கறுப்பர் கூட்டம் வழக்கில் பூட்டி சீலிடப்பட்ட ஸ்டுடியோவை திறக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு முன்பிணை வழங்கிய நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details