தமிழ்நாடு

tamil nadu

அட்ரஸ் இல்லாத டிடிவி தினகரன் - இணையத்தில் வைரலாகும் புகழேந்தியின் சர்ச்சை வீடியோ

By

Published : Sep 10, 2019, 7:12 AM IST

சென்னை: முகவரி இன்றி இருந்த டிடிவி தினகரனை ஊருக்கு அடையாளப்படுத்தியதே நான்தான் என டிடிவியின் ஆதரவாளரான புகழேந்தி கூறும் வீடியோ வைரலாகிச் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ttv

சசிகலாவின் விசுவாசியாக டிடிவி தினகரனின் தளபதியாக விளங்கியவர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் திமுகவில் இணைந்தது அமமுகவை உலுக்கிவிட்டது என்றே கூறலாம். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைவதற்கு முன் அவர் பேசும் ஆடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் அவர் தினகரன் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்பதையும், கட்சி மாறவுள்ளார் என்பதையும் தெளிவு படுத்தியிருந்தது.

அதே போன்று அந்த ஆடியோ வெளியான இரண்டே நாளில் தங்க தமிழ்ச்செல்வன் அண்ணா அறிவாலயத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவருக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்கள் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அது மட்டுமல்லாது தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனமும் செய்தார். இந்த நிகழ்வு கட்சி ரீதியாக டிடிவி தினகரனுக்கு பல நெருக்கடிளை உண்டாக்கியதோடு அவரது அரசியல் வாழ்வில் திடீர் சறுக்கலாகவே பார்க்கப்பட்டது.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தபோது

தங்க தமிழ்ச்செல்வனைப் போலவே சசிகலாவின் விசுவாசியாகவும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் உள்ளவர் புகழேந்தி. ஆனால் அவரும் கட்சி தாவிய அமமுக பிரமுகர்களின் பட்டியலில் சேர அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒரு ஆடியோ பதிவை போல் புகழேந்திக்கு ஒரு வீடியோ பதிவு வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், விடுதி அறையில் புகழேந்தியை பார்க்க அமமுக நிர்வாகிகள் சிலர் காத்திருக்கின்றனர்.

பின்னர் அங்கு வந்த நிர்வாகி ஒருவர் புகழேந்தியிடம், நாங்கள் கட்சிக்காக உழைக்க கட்சியை மேம்படுத்த தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் புகழேந்தி 'போகிற இடத்திலும் இருக்கின்ற இடத்திலும் சரியான முகாந்திரம் இல்லாமல் அங்கு போகக்கூடாது. அந்த இடத்துக்கு சரியான எதிர்காலம் வேண்டும். எனக்கு அங்கே போய் நிற்கவும் விருப்பமில்லை. 14 வருடம் முகவரி இல்லாத டிடிவி தினகரனை அடையாளப்படுத்தியது புகழேந்தி தான். அம்மா சாவின் போதும் அவர் உடனில்லை. எனவே நான் ஒரு பட்டியலை தயார் செய்கிறேன். உங்களிடத்தில் ஆலோசனை செய்து முடிவு செய்கிறேன்' என்று கூறுகிறார்.

இணையத்தில் பரவும் புகழேந்தியின் வீடியோ

இது அமமுக மீதும் டிடிவி தினகரன் மீதும் புகழேந்தி அதிருப்தியில் உள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

சசிகலாவின் விசுவாசி, டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் என்று ஒரே வழியில் பயணித்த தங்க தமிழ்ச்செல்வனும் புகழேந்தியும், ஆடியோ, வீடியோ என்று கட்சியை விட்டு விலகுவதிலும் ஒரே பாணியைக் கடைப்பிடிக்கின்றனர் போலும்.

Intro:Body:'14 வருடம் முகவரி இல்லாத டிடிவி தினகரனை ஊருக்குள் அடையாளப்படுத்தியதே புகழேந்தி தான்' என்று புகழேந்தியே கூறும் வீடியோ பதிவு வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

சசிகலாவின் விசுவாசியாக டிடிவி தினகரனின் தளபதியாக விளங்கியவர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் தி.மு.க. வில் இணைந்தது அ.ம.மு.க. வை உலுக்கிவிட்டது என்றே கூற வேண்டும்.

தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க. வில் இணைவதற்கு முன் அவர் பேசும் ஆடியோ பதிவு ஒன்று வெளியானது. அதில் அவர் தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதும் கட்சி மாறவுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்தியது. பிறகு அடுத்த இரண்டு நாளில் தங்க தமிழ்ச்செல்வன் அண்ணா அறிவாலயத்தில் குடியேறினார்.

தங்க தமிழ்ச்செல்வனை போலவே சசிகலாவின் விசுவாயிகாவும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராகவும் விளங்கியவர் புகழேந்தி. ஆனால் அவரும் கட்சி தாவிய அ.ம.மு.க. பிரமுகர்களின் பட்டியலில் சேர அதிக வாய்ப்பிருக்கிறது என்பது போல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஒரு ஆடியோ பதிவை போல் புகழேந்திக்கு ஒரு வீடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில், நாங்கள் கட்சிக்காக உழைக்க கட்சியை மேம்படுத்த தயாராக இருக்கிறோம் என்று தொண்டர் ஒருவர் புகழேந்தியிடம் கூறுகிறார். அதற்கு ' போகிற இடத்திலும் இருக்கின்ற இடத்திலும் சரியான முகாந்திரம் இல்லாமல் அங்கு போகக்கூடாது. அந்த இடத்துக்கு சரியான எதிர்காலம் வேண்டும். எனக்கு அங்கே போய் நிற்கவும் விருப்பமில்லை. 14 வருடம் முகவரி இல்லாத டிடிவி தினகரனை அடையாளப்படுத்தியது புகழேந்தி தான். அம்மா சாவின் போதும் அவர் உடனில்லை. எனவே நான் ஒரு பட்டியலை தயார் செய்கிறேன். உங்களிடத்தில் ஆலோசனை செய்து முடிவு செய்கிறேன்' என்று புகழேந்தி பதில் கூறுகிறார். இது அமமுக மீதும் டிடிவி தினகரன் மீதும் புகழேந்தி அதிருப்தியில் உள்ளார் என்பதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

சசிகலாவின் விசுவாசி, டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் என்று ஒரே வழியில் பயணித்த தங்க தமிழ்ச்செல்வனும் புகழேந்தியும், ஆடியோ, வீடியோ என்று கட்சியை விட்டு விலகுவதிலும் ஒரே பாணியை கடைப்பிடிக்கின்றனர் போலும்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details