தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Nov 6, 2021, 3:15 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news @ 3 PM
Top 10 news @ 3 PM

1.லண்டனுக்கு நோ சொன்ன அம்பானி; எப்போதும் இந்தியாதான்...

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி, இந்தியாவில் இருந்து சென்று லண்டனில் குடும்பத்துடன் குடியேற இருப்பதாக வெளிவந்த தகவலில் உண்மையில்லை என ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

2.முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்ததற்காக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளித்து நன்றி தெரிவித்தனர்.

3.அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்த சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

4.முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த அனுபவமும் எனக்கு உண்டு - ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியாறு பிரச்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின், தமிழக மக்களின் எந்தப் பிரச்சனை குறித்தும் பேசுவதற்கு அதிமுகவிற்கு முழு தார்மீக உரிமை உண்டு என அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

5.போலீசிடம் தப்பிக்க கூவத்தில் குதித்த நபர்; 5 மணிநேர போராட்டத்திற்குப் பின் உடல் மீட்பு

சென்னை பட்டாபிராம் அருகே சுடுகாட்டில் சூதாட்டம் ஆடியபோது காவல்துறைக்குப் பயந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை ஐந்து நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

6.விஜய் சேதுபதியின் புதுப்படத் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

7.பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் கைது

மதுபோதையில் பேருந்தை வழிமறித்து இரும்பு பைப்பால் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

8.அருவியில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கம் குப்பநத்தம் அருகே அருவிக்கு குளிக்கச் சென்றவர்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டனர்.

9.பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் - மருத்துவமனையில் சிகிச்சை

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10.தொடரும் நீட் மரணங்கள்: மதிப்பெண் குறைவால் மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details