தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎஸ்சி: இவ்வளவு மதிப்பெண் பெற்றால் மட்டுமே வேலை

By

Published : Sep 25, 2021, 3:01 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

tnpsc
tnpsc

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 35க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களை நிரப்பிவருகிறது. கரோனோ தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், தேர்வாணை தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக தமிழ்நாடு அரசுத் துறை மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாள் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக 45 நிர்ணயிக்கப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details