தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி பண்டிகை - நியாயவிலைக் கடைகளின் வேலை நேரம் அதிகரிப்பு

By

Published : Oct 29, 2021, 10:49 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளின் வேலை நேரத்தை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்
பொது விநியோகத்திட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 01-ஆம் தேதி முதல் 03ஆம் தேதி வரை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நியாயவிலைக் கடைகளை திறந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் நவம்பர் 1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்க இயலாதவர்கள் வழக்கம் போல் பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 7ஆம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையா?

ABOUT THE AUTHOR

...view details