தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் பறிமுதல்

By

Published : Aug 30, 2022, 6:19 PM IST

சென்னையில் 300ஆண்டுகள் பழமைவாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரு சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Etv Bharatசென்னையில் 300  ஆண்டுகள் பழமை வாய்ந்த  சிலைகள்  பறிமுதல்
Etv Bharatசென்னையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் பறிமுதல்

சென்னை:சென்னை அண்ணா நகர் 5ஆவது மெயின் ரோட்டில் ஒரு வீட்டில் பழமைவாய்ந்த சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விரைந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பழமைவாய்ந்த உட்கார்ந்த நிலையில் உள்ள மாரியம்மன் சிலை மற்றும் நடனமாடும் நடராஜர் சிலை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இரு சிலைகள் குறித்து விசாரணை நடத்திய போது, பெற்றோர் காலத்திலிருந்தே சிலைகள் இருப்பதாகவும், சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் இரு சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரு சிலைகளைப் பரிசோதித்தபோது கோயிலில் பொருத்துவதற்கான அடையாளங்கள் இருப்பதை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்பதும் கள்ளச்சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புடையது எனவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிலைகளின் தொன்மை குறித்தும், எந்த கோயிலுக்குச்சொந்தமானது என்பது குறித்தும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு

ABOUT THE AUTHOR

...view details