தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சித்தேர்தல் தோல்வியால் பழனிசாமி பிதற்றுகிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

By

Published : Mar 18, 2022, 8:20 PM IST

Updated : Mar 18, 2022, 8:52 PM IST

உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி அடைந்த படுதோல்வியை மறைக்க அங்கலாய்ப்புகளை பத்திரிகையாளர்களிடம் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறார், பிதற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் பழனிச்சாமி பிதற்றுகிறார்- அமைச்சர் தங்கம் தென்னரசு
உள்ளாட்சித் தேர்தல் தோல்வியால் பழனிச்சாமி பிதற்றுகிறார்- அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னைபட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 'முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் காலத்தில் எந்த வகையில் நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்துகொண்டார். இந்த நிலையில் அவர் மீது அரசு பொய் வழக்குப்போடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டத்தின்படி தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சரான வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில்லாத பணம் மற்றும் ஊழல் பணத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளார். வழக்கத்தில் இல்லாத நிலையில் அதன் பெயர் மட்டுமே தற்போது பேசப்பட்டு வருகிறது.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஆளுநரை வலியுறுத்தி உள்ளார். ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக ஒப்புக்கொண்டுள்ளார். யாருக்கோ பயந்து நீட் விவகாரத்தில் அதிமுக செயல்பட்டது. வழக்கமாக உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சி அடைந்த படுதோல்வியை மறைக்க அங்கலாய்ப்புகளை பத்திரிகையாளர்களிடம் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறார், பிதற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி’ எனத் தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

மேலும் அவர், 'முறைகேடுகள் இல்லாமல் நியாமான முறையில் நடைபெற்ற தேர்தல் உள்ளாட்சித்தேர்தல், இந்த தேர்தலில் முறைகேடு எனச் சொல்வதற்கு அதிமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியிலிருந்த 7000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தனியார் பள்ளிகளுக்கும் இலவசப் புத்தகம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Last Updated : Mar 18, 2022, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details