தமிழ்நாடு

tamil nadu

’கண் இருந்தால் கண்ணீர் வரும்’ - கே.எஸ்.அழகிரி

By

Published : Mar 6, 2021, 2:49 PM IST

சென்னை: வேட்பாளர் நேர்காணல் முடிந்த பிறகு திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

alagiri
alagiri

சட்டமன்ற மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், இன்று அக்கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 25 தொடங்கி நேற்று வரை விருப்ப மனு அளித்த சுமார் 1,880 பேரிடம் இன்றும் நாளையும் இந்த நேர்காணல் நடக்கிறது.

இதை பார்வையிட வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்று மற்றும் நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது. நேர்காணல் முடிந்த பிறகு திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையில் காலதாமதம் ஏதுமில்லை” என்றார்.

’கண் இருந்தால் கண்ணீர் வரும்’ - கே.எஸ்.அழகிரி

தொடர்ந்து, செயற்குழுவில் நேற்று கண்ணீர் விட்டதாக வெளியானத் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அழகிரி, “எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கண் இருந்தால் கண்ணீர் வரும்” என்றார்.

இதையும் படிங்க: மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக முக்கிய ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details