தமிழ்நாடு

tamil nadu

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

By

Published : May 10, 2021, 10:30 PM IST

ஊரடங்கை கருத்தில் கொண்டு மின்கட்டணம் செலுத்தவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு , tangedco
TANGEDCO PRESS RELEASE

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவுதலை கட்டுப்படுத்த மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கினை தமிழ்நாடு அரசு அமல்படுத்தப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இன்று (மே 10) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மின்கட்டணம், நிலுவைத் தொகை ஆகியவற்றை செலுத்த மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை கடைசி நாட்களாக இருந்தால், நுகர்வோர்கள் மே 31ஆம் தேதிவரை மின்கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்.

ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும்: எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

ABOUT THE AUTHOR

...view details