தமிழ்நாடு

tamil nadu

பணி நேரத்தில் செல்போனுக்குத் தடை: பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

By

Published : Feb 7, 2022, 2:09 PM IST

பணி நேரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தடைவிதித்துள்ளது.

Tamilnadu Government bus drivers
Tamilnadu Government bus drivers

சென்னை: அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அனைத்துக் கிளை மேலாளர்களுக்கும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள், பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

அதேபோல், ஓட்டுநர்கள் பணியின்போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும்.

நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும்.

ஒருவேளை பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனைவி நிறைமாத கர்ப்பிணி; புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!

ABOUT THE AUTHOR

...view details