தமிழ்நாடு

tamil nadu

கலைஞர் எழுதுகோல் விருது: தேர்வுக்குழு அமைப்பு

By

Published : Jan 31, 2022, 4:21 PM IST

கலைஞர் எழுதுகோல் விருதுக்குத் தகுதியான விருதாளரைத் தேர்வுசெய்ய தேர்வுக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

"கலைஞர் எழுதுகோல் விருது"
kalaignar-ezhuthukol-award

சென்னை: சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்க தேர்வுக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதில், "இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும், விளிம்புநிலையில் மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு, ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருதுடன் ஐந்து லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விருது ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி விருது வழங்கப்படும். கலைஞர் எழுதுகோல் விருதுக்குத் தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, விருதாளரைத் தேர்வுசெய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக பேராசிரியர் அருணன் செயல்படுவார், உறுப்பினர் செயலராக மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் இடம்பெறுவார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குழு உறுப்பினர்களாக மூத்த பத்திரிகையாளர்கள் ஜென்ராம், சமஸ், தராசு ஷ்யாம், முனைவர் பர்வீன் சுல்தானா, முனைவர் மல்லிகா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை அதிமுக-பாஜக பாழ்ப்படுத்துகின்றன- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details