தமிழ்நாடு

tamil nadu

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் உள்பட யாருக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது -  டிஜிபி கேள்வி

By

Published : Sep 30, 2022, 4:08 PM IST

தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகள் தொடர்பான இடங்கள் உள்பட காவல்துறை பாதுகாப்பு யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கும்படி அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்து மத அமைப்புகளுக்கு எங்கெல்லாம் காவல்துறை பாதுகாப்பு
இந்து மத அமைப்புகளுக்கு எங்கெல்லாம் காவல்துறை பாதுகாப்பு

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரான சோதனைகளை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களின் வீடு, அலுவலகம், கடைகள், தொழில் செய்யும் இடங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சுகள், தாக்குதல்கள் நடந்தன. அதன்பின் காவல்துறை சார்பில் பல்வேறு அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் உள்பட யாருக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் எத்தனை பேருக்கு நிரந்தரமாக போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பேருக்கு தற்காலிகமாக போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் எவ்வளவு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு உத்தரவு மறு ஆய்வு; திருமாவளவன் மனு ஒத்திவைப்பு...

ABOUT THE AUTHOR

...view details