தமிழ்நாடு

tamil nadu

கடலில் கிடக்கும் முகக்கவசங்கள்: அகற்றும் நீச்சல் வீரர்!

By

Published : Jan 22, 2021, 4:24 PM IST

புதுச்சேரி: முறையாக அப்புறப்படுத்தாத காரணத்தினால் கடலின் ஆழ பகுதியில் கிடக்கும் பயனற்ற முகக்கவசங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Face Masks lying in the sea  Swimming coach who removes face Masks lying in the sea  Swimming coach  கடலில் கிடக்கும் முகக் கவசங்கள்  கடலில் கிடக்கும் முகக் கவசங்களை அகற்றும் நீச்சல் பயிற்சியாளர்  முகக் கவசங்கள்
Swimming coach who removes face Masks lying in the sea

புதுச்சேரி, தமிழ்நாடு கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த். இவர் கரோனா ஊரடங்கின்போது ஆழ்கடலுக்கு சென்று பயனற்ற பொருள்கள், பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி கடலின் ஆழ பகுதியில் சுத்தமாக இருப்பதாகக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டார்.

அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவர் கண்டறிய சென்றார். அப்போது, பொதுமக்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் தூக்கி வீசியதால், அவை மழை நீர்வழியாக கடலுக்குள் வந்துள்ளதைக் கண்டறிந்தார்.

ஆழ்கடலில் கிடக்கும் முகக் கவசங்களை அகற்றும் நீச்சல் வீரர்

இதையடுத்து, கடலின் ஆழ பகுதியில் கிடக்கும் முகக்கவசங்களை அவர் கண்டறிந்து, அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஆழ்கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:தங்கத்தில் முகக்கவசம்: வரிச்சியூர் செல்வம் காணொலி வைரல்

ABOUT THE AUTHOR

...view details