தமிழ்நாடு

tamil nadu

விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

By

Published : Aug 25, 2021, 3:51 PM IST

விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 25) கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய அவர், 'இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11,500 கோடி ரூபாய் கடன் தருவதற்கு அரசு நிர்ணயித்துள்ளது. இதில் 20% கடனை 25% வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5% விழுக்காடு உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நடப்பாண்டில் 98,036 விவசாயிகளுக்கு கடன்

அதேபோல், 2021-22ஆம் ஆண்டில் 31-7-2021 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ. 763.01 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்தார்.

இதில் 7,823 பட்டியலின/ பழங்குடியின வகுப்பு விவசாயிகளுக்கு 53.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கருணாநிதி நினைவிடம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details