தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி உயிரிழப்பு

By

Published : Sep 8, 2022, 6:45 AM IST

இலங்கையிலிருந்து நேற்று சென்னை வந்த பயணி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:இலங்கையை சேர்ந்த முகமது பாருக் (57) என்பவர் நேற்று (செப்.7) ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் சுங்கத்துறை, குடியுரிமை அலுவலர்கள், மருத்துவர்கள் சோதனைகளுக்கு வெளியேவந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதை கண்ட சக பயணிகள் விமான நிலைய மருத்துவக் குழுவிற்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்த அக்குழுவினர் அவரை பரிசோதனை செய்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டது.

அவர்கள் முகமது பாருக்கின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இலங்கையில் உள்ள முகமது பாருக் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். முதல்கட்ட தகவலில் பாருக் வியாபாரி என்றும், அதுதொடர்பாக சென்னை வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: BSF பெயரில் உருவாக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கு 24 மணிநேரத்திற்குள் நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details