தமிழ்நாடு

tamil nadu

'நகை கடன் தள்ளுபடி இல்லை' - அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டம்

By

Published : Jun 13, 2019, 11:11 PM IST

சென்னை: நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல், அவ்வாறு ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை அடுத்த மதுரவாயலில் தமிழ்நாடு அரசு சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய மத்திய கூட்டுறவு வங்கி கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக, வங்கிகள், கணினிகளை நவீனமயமாக்க எந்தவித நடவடிக்கைகளையும் செய்யவில்லை. தற்போது உள்ள அதிமுக அரசு தான் அதை நிறைவேற்றியுள்ளது.

'நகை கடன் தள்ளுபடி இல்லை' - அமைச்சர் செல்லூர் ராஜு

1930ஆம் ஆண்டு மூன்று கிளைகளோடு குறைந்த இருப்புத்தொகையுடன் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இன்று 69 கிளைகளைக் கொண்டுள்ளது, இதன் மூலமாக 432 பயனாளிகளுக்கு 1 கோடியே 84 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் நகை கடன் ரத்து செய்யப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றிவுள்ளார், அவர் தமிழ்நாட்டில் கூறினாரே ஆனால் அதை மத்தியில் கூறினாரா? அதிமுக அரசுக்கு நகை கடனை ரத்து செய்யும் திட்டம் இல்லை மக்கள் வழக்கம்போல வட்டியை கட்டவேண்டும்" என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Intro:நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல்,நகை கடன் ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற புதிய வங்கிகிளை திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி


Body:சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் தமிழக அரசு சார்பில் புதிய மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் தற்போது வெற்றிபெற்றுள்ள திமுக ஆட்சியில் இருந்தபோது வங்கிகளை நவீனமயமாக்க கணினி மையமாக்க எந்த விதமான நடவடிக்கைகளையும் செய்யவில்லை தற்போதுள்ள அரசு அதை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார் எதிர் கட்சிகளின் வீண் விமர்சனகளினால் தேர்தலில் தோல்வியடைந்ததாக கூறினார் மேலும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் நியாவிலை கடைகளில் தரப்படும் அரிசி தரமற்றதாக பயன்படுத்த தகுதியற்றதாகவும் இருந்ததாக குற்றம்சாட்டினார்.பின்னர் தொடர்ந்து பேசிய அவர் தற்போதுள்ள அதிமுக அரசு தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது ஆனால் திமுக ஆட்சியில் 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்துள்ளது அதனை மாற்றியுள்ளோம்.சுதந்திர இந்தியாவில் ஒரு துறையில் ஒரு அமைச்சர் தொடர்ந்து 8 ஆண்டுகள் இருந்தது தான் மட்டுமே என பெருமிதம்கொண்டார்.


Conclusion:1930ம் ஆண்டு 3 கிளையோடு குறைந்த இருப்புத்தொகையோடு துவங்கப்பட்ட இந்த வங்கி இன்று 69 கிளைகளை கொண்டுள்ளது.இன்றுமட்டும் இதன் மூலமாக 432 பயனாளிகளுக்கு 1கோடியே 84 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் நகை கடன் ரத்து செய்யப்படும் என கூறி மக்களை ஏமாற்றி உள்ளார் அவர் தமிழகத்தில் கூறினார் அல்லது மத்தியில் கூறினாரா என அவரைத்தான் கேட்க வேண்டும்,அதிமுக அரசுக்கு நகை கடனை ரத்து செய்யும் திட்டம் இல்லை மக்கள் வழக்கம்போல வட்டியை கட்டவேண்டும் என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details