தமிழ்நாடு

tamil nadu

பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில் 6000 காவலர்கள் குவிப்பு

By

Published : Dec 6, 2021, 7:06 AM IST

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் 6 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

22nd anniversary of babri masjid demolition, சென்னை போலீஸ் பாதுகாப்பு, போலீஸ் பாதுகாப்பு, police protection in chennai, பாபர் மசூதி இடிப்பு தினம், சென்னையில் 6 ஆயிரம் காவலர்கள் குவிப்பு
Babri Masjid demolition anniversary

சென்னை:பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (டிசம்பர் 6) எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் நிலையம் , பேருந்து நிலையம் , வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை முழுவதும் 6 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருவதாக மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (டிசம்பர் 5) உயர் அலுவலர்கள் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களிலும் வாகன தணிக்கை நடைபெற்றது. அம்பேத்கர் நினைவு தினமும் இன்று கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details