தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் வெளியீடு

By

Published : Aug 25, 2021, 5:45 PM IST

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் இன்று (ஆக. 25) பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான ரேண்டம் எண்களை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி விவரங்களையும் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் வெளியீடு
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்கள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூலை 26ஆம் தேதிமுதல் நேற்றுவரை (ஆக. 24) www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

இதனையடுத்து, பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மாணவர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிவரை பதிவு செய்திருந்தனர். பின்னர் இதற்கான ரேண்டம் எண் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்துவதற்கான தேதி விவரங்களையும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

ரேண்டம் எண் குறித்து விளக்கம்

பொறியியல் துறை மாணவர்களுக்கு ரேண்டம் எண் பயன்கள் குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கி இருந்தார்.

தொடர்ந்து, தர வரிசைப்படி ஒரே கட் ஆஃப் மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வுசெய்ய ரேண்டம் எண் பயன்படுகிறது.

ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இருந்தால், யாருக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்குவது என்ற குழப்பத்தை தீர்க்க ரேண்டம் எண் பயன்படுத்தப்படும்.

அந்த வகையில் மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவுசெய்துள்ள இணையப் பக்கத்தில் ரேண்டம் எண்ணினை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கலந்தாய்விற்கான அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

கலந்தாய்வு தேதிகள்

  • மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.
  • சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதிமுதல் செப்டம்பர் 11ஆம் தேதிவரை நடைபெறும்.
  • பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பொறியியல் படிப்பில் சேர கூடுதல் விண்ணப்பம்'

ABOUT THE AUTHOR

...view details