தமிழ்நாடு

tamil nadu

7.5% இட ஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது!

By

Published : Nov 19, 2020, 11:07 AM IST

Updated : Nov 19, 2020, 4:27 PM IST

counselling
counselling

11:03 November 19

7.5% இட ஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது!

7.5% இட ஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது!

சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்களிடமிருந்து மருத்துவ கல்லூரிகள் கட்டணம் எதுவும் கேட்கக்கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வு காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் பலர், கல்வி கட்டணம் செலுத்துவதில் பெற்றோருக்கு சிரமம் ஏற்படும் என்பதால், காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் மெதுவாகவே நிரம்புகின்றன.

இதுகுறித்து மாணவர் சேர்க்கை குழு செயலாளர் செல்வராஜ் கூறும்போது, ” நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் கலந்தாய்வில், எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் 224 இடங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்கு இடங்களையும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 7 இடங்களையும் மாணவர்கள் தேர்வு செய்தனர்.

இரண்டாம் நாளான இன்று, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள மூன்று எம்பிபிஎஸ் இடங்களுக்கும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 82 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 80 பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதலமைச்சர் அறிவித்தது போல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும். மாணவர்கள் கல்லூரிகளை தயக்கமின்றி தேர்வு செய்து சேரலாம். அவர்களுக்கான ஸ்காலர்ஷிப் சிறப்பு நிதி உதவி போன்றவை செய்யப்படும். எனவே, மாணவர்கள் கலந்தாய்வில் இடங்களில் தைரியமாக தேர்வு செய்ய அறிவுரை கூறியுள்ளோம்.

மருத்துவப்படிப்பில் மாணவர்கள் 2 இடங்களில் இருப்பிடச் சான்று அளித்து இடங்களைத் தேர்வு செய்வதைத் தடுப்பதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வுக்குப்பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் “ என்றார்.

இதனிடையே, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்களிடமிருந்து, கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் கட்டணம் எதுவும் கேட்கக்கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவ படிப்பு கலந்தாய்வு: 4 மாணவிகளுக்கு கரோனா

Last Updated : Nov 19, 2020, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details