தமிழ்நாடு

tamil nadu

ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்த 'மக்களின் மருத்துவர்' காலமானார்!

By

Published : May 20, 2021, 11:09 PM IST

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்த மருத்துவர் பார்த்தசாரதி கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

Pazhaya Vannarapettai   Doctor Parthasarathy dies due to corona infection in chennai
Pazhaya Vannarapettai Doctor Parthasarathy dies due to corona infection in chennai

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், தமது இல்லத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்து வந்தார்.

தொடக்க காலக்கட்டத்தில் 60 பைசா கட்டணத்தில் இருந்து மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கி, கால மாற்றத்திற்கு ஏற்ப சொற்ப அளவிலான கட்டணத்தை கூட்டி 50 ரூபாய் வரைக்கும் மருத்துவ சேவையை தொடர்ந்தார். சில நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்த்து வந்தார்.

மக்களின் மருத்துவருக்கு பொதுமக்கள் அஞ்சலி

சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலினின்றி நேற்று (மே.19) இரவு காலமானார். இவரது இறப்பு அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'நல்லாட்சிக்கான முதல்படி' - ஸ்டாலினை பாராட்டிய ஜக்கி

ABOUT THE AUTHOR

...view details