தமிழ்நாடு

tamil nadu

கட்டபொம்மனின் தியாகத்தை நினைவு கூர்வோம் - ஓபிஎஸ்!

By

Published : Oct 16, 2020, 10:27 AM IST

சென்னை: உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

kattabomman
kattabomman

பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். அளவிற்கு அதிகமாக அவர்கள் விதித்த வரிகளை கட்ட மறுத்த கட்டபொம்மன், ஆங்கிலேயர்களுடன் வீரச்சமர் புரிந்து, கடைசியில் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர், கடந்த 1799 ஆம் ஆண்டு இதே நாளில், ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் என்பவரால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமரணம் அடைந்தார். அவரது 221 ஆவது நினைவு நாளான இன்று(அக்.16) பல்வேறு அரசியல் இயக்கத்தினரும், கட்டபொம்மனின் நினைவைப் போற்றி வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், ” ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரமுழக்கமிட்டு, உயிரை துச்சமெனத் தியாகம் செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் “ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அசோகரின் கட்டளை கல்வெட்டுகளுக்கு கர்நாடக இசைவடிவம் தரும் டி.எம். கிருஷ்ணா - மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details