தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை

By

Published : Jul 31, 2022, 9:50 AM IST

சென்னை திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் நேற்று (ஜூலை 30) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நர்சிங் கல்லூரி மாணவி கல்லூரி விடுதியில்  தற்கொலை
நர்சிங் கல்லூரி மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை

சென்னை:திருவேற்காடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி ஒன்று விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இந்த கல்லூரியில் மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜுலை 30) காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு தோழிகளுடன் வந்தவர் தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்குள் இருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராதால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்துள்ளனர். அறையின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால், கதவை தட்டியுள்ளனர். அம்மாணவி கதவை திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்கொலையை கைவிடுக

இதனையடுத்து, சக மாணவி ஒருவர் உடனே உள்ளே சென்று அவரை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், அந்த மாணவி அங்கேயே உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து போன மாணவியின் உடலை மீட்டு பிரதே உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு வந்தனர். அங்கு தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற குடும்பத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். இதுகுறித்து போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போனை பறிமுதல் செய்த காவலர்கள், அவர் கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடமும், விடுதியில் உள்ள சக மாணவிகளிடமும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பூந்தமல்லி தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு - திருப்பத்தூர் கல்லூரி மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details