தமிழ்நாடு

tamil nadu

வடகிழக்கு பருவமழை; முதலமைச்சர் நாளை ஆலோசனை

By

Published : Oct 25, 2021, 1:05 PM IST

வடகிழக்கு பருவமழை நாளை (அக்.26) தொடங்கயுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாளை ஆட்சியர்களுடன் ஆலோசனை
நாளை ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை:தமிழ்நாட்டில் நாளை (அக்.26) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உல்ளார்.

சென்னையில் மண்டலம் வாரியாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகள் மக்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்துவது, மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது, அணைகளின் நீர்மட்டம் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

ABOUT THE AUTHOR

...view details