தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடி சென்னை வருகை - 22,000 போலீசார் குவிப்பு,

By

Published : Jul 27, 2022, 7:31 AM IST

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடி கைது- சென்னை காவல் ஆணையர்
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடி கைது- சென்னை காவல் ஆணையர்

சென்னை:உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். இதனை ஒட்டி மேற்கொண்டுள்ள பாதுகாப்பு பணியை ஆய்வு செய்வதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று(ஜூலை 26) வருகை தந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பானது ஏழு மடங்கு அதிகரிக்கப்படும் எனவும், பிரதமர் வரும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

ஏழு அடுக்கு பாதுகாப்பு:மேலும் பிரதமர் வருகையை ஒட்டி 22 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், ஏற்கனவே ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும் இரண்டு அடுக்கு உயர்த்தி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் மட்டும் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும், விமான நிலையம், கிண்டி ராஜ்பவன், அண்ணா பல்கலைக்கழகம், ஐஎன்எஸ் அடையார் ,உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 15 நிமிடங்களில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் உடனடி கைது- சென்னை காவல் ஆணையர்

மேலும் ராட்சத பலூன்கள், ட்ரோன் கேமராக்கள், பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல நேற்று(ஜூலை 26) இரவு முதல் வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார். தங்கும் விடுதிகளில் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என கூறினார். குறிப்பாக நேரு விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள சாலைகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என கூறினார்.

பிரதமர் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 54 ரவுடிகளை கைது செய்துள்ளதாகவும், அனைத்து பகுதிகளிலும் கண்காணித்து முக்கிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஆகிய இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டு இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தாலோ அவர்களை கண்காணித்து உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க:2023ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் 'சென்னை மாரத்தான்' போட்டியின் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details