தமிழ்நாடு

tamil nadu

விருதுநகரில் பொங்கல் பரிசுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்!

By

Published : Jan 11, 2022, 9:22 AM IST

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்த அமைச்சர்கள்
ஆய்வு செய்த அமைச்சர்கள்

விருதுநகர் : தமிழ்நாட்டில் தற்பொழுது நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்புகளில் குறைபாடுகள் மற்றும் குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு நடத்தி குறைபாடுகளை தீர்க்க உத்தரவிட்டிருந்தார்.

விருதுநகரில் அமைச்சர்கள் ஆய்வு

அதன்படி நேற்று ஜனவரி 10ஆம் தேதி, விருதுநகரில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தர்காஸ் தெரு, உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

விருதுநகரில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

இந்த ஆய்வில் கடைகளில் வழங்கப்படும் தொகுப்பில் இருபத்தி ஒரு பொருட்கள் உள்ளதா? அவற்றின் எடை, தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் வட்டார வழங்கல் அலுவலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: விருதுநகர் எம்.எல்.ஏவுக்கு கரோனா - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று திரும்பியநிலையில் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details