தமிழ்நாடு

tamil nadu

மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

By

Published : Mar 23, 2022, 2:07 PM IST

மருதமலை முருகன் கோயிலில் மின்தூக்கி (லிப்ட் வசதி) பயன்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் சேகர்பாபு
மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் சேகர்பாபு

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளான் நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனையடுத்து, (மார்ச் 21) முதல் மூன்று நாள்களுக்கு, நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மீதான விவாதம் தொடங்கியது.

இதில், முதல் நாளில் மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். இதில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, பட்ஜெட் மீதான இரண்டாவது நாள் விவாதம் சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 22) தொடங்கியது.

மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களின் நலன் சார்ந்து பல கேள்விகளை முன் வைத்தனர். இதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் வழங்கினார்கள். இதனிடையே, கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் பேசுகையில், "அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகளை பாதுகாத்து கண்காணிக்க 25 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதுவும் பட்ஜெட்டில் இல்லை" என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, "கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக முதல்கட்டமாக 2,500 காவலர்களை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்" என்றார். இதனையடுத்து, சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 23) கேள்வி நேரத்தின் போது கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், மருதமலை சுப்பிரமணிய சாமி கோயிலுக்குக் கம்பி வட ஊர்தி வசதி செய்து தர அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்டம் மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு கம்பிவட சேவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் மண் பரிசோதனை மேற்கொண்டதில் அதற்கான சாத்திய கூறு அங்கு இல்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

மருதமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..

கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி திருக்கோயில் 20.4 மீட்டர் தூரத்தை 100 படிக்கட்டுகளைக் கடந்து பொதுமக்கள் செல்வதில் உள்ள சிரமத்தைப் போக்க 3 கோடியே 86 லட்சத்து 80 ஆயிரம் கோடி செலவில் மின் தூக்கிக்கு அனுமதி அளித்து. அடுத்த மாதம் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி ஸ்ரீ மாகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details