தமிழ்நாடு

tamil nadu

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு!

By

Published : Jun 27, 2022, 5:04 PM IST

வயது மூப்பின் காரணமாக வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு
வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

செங்கல்பட்டு:2000ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி சிறு பூங்காவிலிருந்து 'மணி' என்ற சிங்கம் மீட்கப்பட்டது. அது வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண் சிங்கத்திற்கு தற்போது 32 வயதாகிறது.

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக பல்வேறு பிரச்னைகளில் இருந்த சிங்கம் மறுவாழ்வு மையத்தில் பூங்கா நிர்வாகிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இன்று(ஜூன்.27) காலை 7 மணி அளவில் ஆண்சிங்கம் உயிரிழந்ததாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழப்பு - சோகத்தை ஏற்படுத்தும் முழுப்பின்னணி

ABOUT THE AUTHOR

...view details