தமிழ்நாடு

tamil nadu

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வழக்கு... அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு...

By

Published : Dec 13, 2021, 3:46 PM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வழக்கமான நடைமுறைகளை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், MHC,
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்களை அக்டோபர் 14ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டும் வழக்கமான நடைமுறைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று சென்னையைச் சேர்ந்த ஆனந்த தேசிகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், வரதராஜ பெருமாள் கோயிலில் துளசி தீர்த்தம், திருமஞ்சனம், அர்ச்சனை, பிரசாதம், வேத பாராயணம், சடாரி போன்ற வழக்கமான நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளிட்ட கோவில்களில் இந்த வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான நடைமுறைகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details