தமிழ்நாடு

tamil nadu

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Jan 17, 2022, 4:57 PM IST

நடிகர் கமல்ஹாசன் வழக்கமான பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(ஜன.17) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Kamal Haasan admitted in Hospital
நடிகர் கமல்ஹாசன்

சென்னை: பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வந்த அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கடந்த நவம்பர் 22ஆம் தேதியன்று அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிறகு உடனே சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில நாள்கள் கழித்து குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வழக்கமான பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(ஜன.17) அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலி - கமல் ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details