தமிழ்நாடு

tamil nadu

Vaccination work Status: பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்

By

Published : Jan 6, 2022, 4:40 PM IST

Vaccination work Status: தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்குப் பள்ளி வளாகங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Intensity of vaccination work for school students
Intensity of vaccination work for school students

சென்னை: Vaccination work Status: 15 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து சென்னையில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சுமார் 4 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகளுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று தடுப்பூசி செலுத்தினர்.

மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை உரிய முறையில் தெரிவித்து, மாணவிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் ஜனவரி 5ஆம் தேதி வரையில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 784 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் பாதிப்பு.. அதிவேகத்தில் பரவும் கரோனா!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details