தமிழ்நாடு

tamil nadu

மத்திய வங்கக்கடலில் புதிய புயல்?

By

Published : Sep 10, 2021, 3:26 PM IST

மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய புயல்
புதிய புயல்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் காரணமாக இன்று (செப்.10) முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதோபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதையடுத்து தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெறக்கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் 14ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால், மீனவர்கள் மேற்கூறிய தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தென்மேற்குப் பருவக்காற்று: தமிழ்நாடு,புதுவையில் மழை

ABOUT THE AUTHOR

...view details