தமிழ்நாடு

tamil nadu

கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை

By

Published : Mar 15, 2022, 7:30 PM IST

சென்னையில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

சென்னை:ராயபுரம் பிச்சாண்டி தெருவைச் சேர்ந்த பர்மா பஜாரில் வியாபாரி மகாசர்அலி (42)வாழ்ந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி பரகத் நிஷா (34) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று மார்ச் 14ஆம் தேதி, பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு வந்து வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததை அறிந்து, தனது உறவினருடன் வந்து பார்த்தபோது கணவன், மனைவி தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..!

உடனடியாக சம்பவம் தொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் காவல் துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராயபுரம் காவல்துறை விசாரணை

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் மகாசர் அலிக்கு, தொழில் தேவைக்காகப் பணம் கடன் கொடுத்தவர்கள் அது பற்றி தொல்லை கொடுத்து வந்ததனால், மனவிரக்தியில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை மகாசர் அலி மற்றும் அவருடைய மனைவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராயபுரம் பகுதியில் கடன் தொல்லையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாவரசு கொலை வழக்கு - முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் ஜான் டேவிட் மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details