தமிழ்நாடு

tamil nadu

தொடர் மழை... 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

By

Published : Nov 9, 2021, 3:30 PM IST

தமிழநாட்டில் தொடர் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school students
school students

சென்னை:தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று(நவ.9) அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்து சில நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.10), நாளை மறுநாள் (நவ.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...

ABOUT THE AUTHOR

...view details