தமிழ்நாடு

tamil nadu

For Public Attention: மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்கவேண்டியவை!

By

Published : Nov 18, 2021, 5:08 PM IST

மழைக்காலங்களில் பொதுக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளையும், அவசர உதவி எண்களையும் (Emergency Helpline) பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) வெளியிட்டுள்ளது.

instruction for public in rainy season, Greater Chennai Corporation
Instructions that people should follow during the rainy season

சென்னை:வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவெடுத்துள்ள நிலையில், 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Regional Meteorological Centre) அறிவித்துள்ளது.

இந்நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளையும், புகார் மற்றும் கூடுதல் தகவல்களுக்கான அவசர எண்கள், தொற்றுநோய் மருத்துவமனை எண்கள் ஆகியவற்றை பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் துறை இன்று (நவ. 18) வெளியிட்டுள்ளது.

மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்கவேண்டியவை

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

  • மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு காலரா, மஞ்சள் காமாலை டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.
  • உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும்.
  • வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.
  • சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
  • திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும், சுய சிகிச்சை செய்யக் கூடாது.
  • வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால், உப்பு சர்க்கரை கரைசல் (ORS Solution), வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
  • தங்கள் வீட்டிலுள்ள மேல்நிலை / கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பீளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருள்களையும் அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும்.
  • சுகாதாரத்தை காக்க சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்கவும்.
    மழைக்காலங்களில் மக்கள் கடைபிடிக்கவேண்டியவை

அவசர உதவி எண்கள்

  • புகார் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 1913அவசர உதவி எண்ணை தொடர்புக் கொள்ளவும்
  • தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையின் தொடர்பு எண்கள்: 044-25912686/87/88

இதையும் படிங்க: Red Alert: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details