தமிழ்நாடு

tamil nadu

Bad Weather: சென்னையில் 8 விமானங்கள் ரத்து

By

Published : Nov 10, 2021, 4:01 PM IST

Updated : Nov 10, 2021, 5:14 PM IST

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இன்று (நவ. 10) எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் 8 விமானங்கள் ரத்து, விமானங்கள் ரத்து, flight cancelled, மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்து, Flights canceled in chennai airport
சென்னையில் 8 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னை உள்ளிட்டதமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து இன்று புறப்பட வேண்டிய நான்கு விமானங்கள், சென்னைக்கு வர வேண்டிய நான்கு விமானங்கள் உள்ளிட்ட எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை, திருச்சி விமான சேவை

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு 40 பயணிகளுடன் இன்று மாலை 4.10 மணிக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், திருச்சிக்கு 41 பயணிகளுடன் இரவு 7.55 மணிக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், இன்று இரவு 7.30 மணிக்கு மதுரையில் இருந்து 74 பயணிகளுடன், இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து 34 பயணிகளுன் வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மும்பை, சார்ஜா விமானங்களும் ரத்து

மேலும், சென்னையில் இருந்து இன்று இரவு 7.55 மணிக்கு 85 பயணிகளுடன் மும்பை செல்ல வேண்டிய விமானமும், மும்பையில் இருந்து நாளை (நவ. 11) அதிகாலை 1 மணிக்கு 39 பயணிகளுடன் சென்னை வரவேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்துசெய்யப்பட்ட விிமானங்களின் விவரம்

சாா்ஜாவில் இருந்து இன்று இரவு 8.55 மணிக்கு 154 பயணிகளுடன் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானமும், இன்று இரவு 9.35 மணிக்கு 127 பயணிகளுடன் சாா்ஜா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை பாதிப்பு அதிகமானால் மேலும் சில விமானங்களும் ரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஆய்வு!

Last Updated : Nov 10, 2021, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details