தமிழ்நாடு

tamil nadu

Heavy rain alert: 5 நாட்களுக்குத் தொடரும் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறைவிட வாய்ப்பு

By

Published : Nov 20, 2021, 3:12 PM IST

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நாளை சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை (Heavy Rain Alert) பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Regional Meteorological centre) தெரிவித்துள்ளது.

Heavy rain alert, தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை
Heavy rain alert

சென்னை: சென்னை வானிலை மையம் இன்று (நவ. 20) வெளியிட்டுள்ள தகவலில், "வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

உள்கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள், வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஐந்து நாள்களுக்கு கனமழை

நாளை (நவ. 21) சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுதினம் (நவ. 22) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ. 23, 24ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னைக்கு?

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனம் (சிவகங்கை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் கூறப்பட்டுள்ளது. ஐந்து நாள்களுக்கு தொடர் கனமழை இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: Air Force Rescue: ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை

ABOUT THE AUTHOR

...view details