தமிழ்நாடு

tamil nadu

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

By

Published : May 30, 2020, 9:01 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

தமிழ்நாட்டில் மேலும் 938 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 938 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஒன் இந்தியா விரிச்சுவல் இசை நிகழ்ச்சி- 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு!

மும்பை: ஷிபானி காஷ்யப், சுமித் சைனி, விபின் அனேஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாளை (மே 31) ஒன்றிணைந்து மெய்நிகர்(Virtual) மேடையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். பூட்டுதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவித்துள்ளனர்.

‘ஒரு கோடிக்கும் மேலான மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்’ - ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் ஒரு கோடிக்கும் மேலான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பார்வையற்ற தாய்க்கு உதவிக்கரம் நீட்டிய அரசு அலுவலர்கள்!

பார்வையற்ற தாய்க்கு கழிப்பறை கட்டவேண்டும் என்ற ஆசையில் இருந்த சிறுவன் பிரபுவுக்கு, ஈடிவி பாரத் செய்தி ஊடகத்தில் இதுகுறித்து வெளியான செய்தியின் வாயிலாக உதவிகள் கிடைத்துள்ளன. பேரூராட்சி துணை இயக்குநர் குற்றாலிங்கம் பிரபுவின் தாயை நேரில் சந்தித்து எல்லா விதத்திலும் உதவியாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளார்.

வெட்டுக்கிளிகள் தமிழ்நாடு வர வாய்ப்பே இல்லை - ககன்தீப் சிங் பேடி

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கராச்சி விமான விபத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாமாபாத் : கராச்சி விமான விபத்து குறித்து வெளிப்படையான விசாரணை கோரிய மனு மீதான விசாரணை ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களை அரசு நிச்சயம் பாதுகாக்கும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

டெல்லி: கரோனா லாக்டவுன் பாதிப்பின் காரணமாக நிறுவனங்களின் மதிப்பு பெருமளவில் சரிவதைத்தடுக்க மத்திய நிதி நிச்சயம் உதவும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் - எடியூரப்பாவுக்கு அமித் ஷா நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடகா பாஜகவின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல் கரோனா பாதிப்பை கையாளுவதில் கவனம்கொள்ள வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்மாநில முதலமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நான்கு ஆண்டுகளில் பல சவால்களை சந்தித்தேன் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: பல சவால்களை கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்தது வரலாறே சாட்சி என துணைநிலை ஆளுநராக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் பார்வதி திருவோத்து

தேசிய விருது பெற்ற நடிகையான பார்வதி திருவோத்து இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். இதற்காக இரு கதைகளையும் எழுதியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details